விஜய்யை அரசியல் கட்சி ஆரம்பிக்க சொன்னதே ராகுல் காந்தி தான்.. அரசியல்வாதியின் புதிய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,August 26 2024]

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரை அரசியல் கட்சி தொடங்க சொன்னது ராகுல் காந்தி தான் என்று விஜயதாரணி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜயதாரணி, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க ஐடியா கொடுத்ததே ராகுல் காந்தி தான் என்றும், ராகுல் காந்தி அவர்களை விஜய் சென்று பார்த்த போது காங்கிரஸ் கட்சியில் தனக்கு ஒரு பொறுப்பு வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் ராகுல் காந்தி நீங்கள் தமிழ்நாட்டில் ஒரு பெரிய ஸ்டாராக இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு தனி கட்சி ஆரம்பித்து தனி ஆவர்த்தனம் செய்யலாம், அந்த அளவுக்கு உங்களுக்கு வலிமை இருக்கிறது, எனவே நீங்கள் ஏன் இன்னொரு கட்சியில் பொறுப்பு கேட்கிறீர்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

ராகுல் காந்தி சொன்ன தைரியத்தில் தான் விஜய் இன்று கட்சி ஆரம்பித்துள்ளார், நான் காங்கிரஸில் இருந்ததால் எனக்கு இந்த விஷயம் தெரியும் என்று விஜயதாரணி கூறினார்.

ஏற்கனவே விஜய் கட்சி ஆரம்பிக்க பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று பல அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது ராகுல் காந்தி கொடுத்த ஐடியாவில் தான் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.