576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரஃபேல் விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு வாங்கியது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
- IndiaGlitz, [Thursday,July 30 2020]
பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கிய ரஃபேல் போர் விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன என்பதும் ஹரியானா மாநிலத்திலுள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் அவை கம்பீரமாக தரையிறங்கின என்பதும், இது குறித்த வீடியோக்கள் நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே
23 ஆண்டுகள் கழித்து அதாவது 1997ஆம் ஆண்டுக்கு பின் இந்திய விமானப்படையில் போர் விமானங்கள் இறக்குமதியாகி உள்ளன என்பதும், எதிரிகளின் ரேடார் சிக்னலில் சிக்காமல், குறி தவறாமல் இலக்கை தாக்கும் என்பதும் இந்த ரஃபேல் விமானங்களின் சிறப்புகள் என்று இந்திய ராணுவத்தினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விமானத்தை வாங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் மத்திய அரசுக்கு மூன்று கேள்விகளையும் எழுப்பி உள்ளார். அந்த மூன்று கேள்விகள் பின்வருமாறு:
1) ஒரு ரஃபேல் விமானத்தின் விலை ரூ.525 கோடிக்கு பதிலாக ரூ.1,670 கோடிக்கு வாங்குவது ஏன்??
2) மொத்தம் 126 விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் வாங்குவது ஏன்??
3) ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக திவாலான அனில் அம்பானிக்கு, ரூ.30,000 கோடி ஒப்பந்தம் கொடுத்தது ஏன்?
ராகுல்காந்தியின் இந்த மூன்று கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Congratulations to IAF for Rafale.
— Rahul Gandhi (@RahulGandhi) July 29, 2020
Meanwhile, can GOI answer:
1) Why each aircraft costs ₹1670 Crores instead of ₹526 Crores?
2) Why 36 aircraft were bought instead of 126?
3) Why was bankrupt Anil given a ₹30,000 Crores contract instead of HAL?