'சார்' என்று கூப்பிட வேண்டாம்! சென்னை கல்லூரி மாணவிகளுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று காலை தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார். உரையாடலுக்கு முன் 'தன்னை யாரும் 'சார் என்று அழைக்க வேண்டாம் என்றும், ராகுல்காந்தி என்றே அழைக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் எளிதான கேள்விகளை தவிர்த்து கடினமான கேள்விகளை கேட்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
“என்னைப் போல் 3000 பேருக்கு மத்தியில் நின்று கொண்டு என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொல்ல பிரதமருக்கு தைரியம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டியில் மாற்றம் செய்யப்படும் என்றும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறுகுறு தொழில்கள் இன்றைய ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஊழல் விவகாரத்தில் பிரதமராக இருந்தாலும் ராபர்ட் வதேராவாக இருந்தாலும் அனைவரிடமும் விசாரணை தேவை என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ராகுல், 'பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென்னிந்தியா சிறந்து விளங்குவதாக மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், 'பிரதமர் என் மீதும், என் குடும்பத்தின் மீதும் அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி ஆத்திரத்தில் இருந்ததாகவும், ஆனால் தனக்கு அவர் மீது எந்தவித கோபமும் இல்லை என்றும், அன்பு மூலம் மட்டுமே ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால் அன்று மோடியை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி தனது அரசியல் குரு என்றும் தன்னுடைய இளவயதில் அவரை பார்த்துதான் அரசியல் கற்றுக்கொண்டதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் பயங்கரவாத பிரச்சனையை விட வேலையின்மை பிரச்சனைக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இன்னொரு கேள்விக்கு ராகுல்காந்தி பதிலளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments