நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவினை சந்தித்து உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இது அரசியல் மட்டத்தில் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
“மோடியும் கற்பனை உலகில் சஞ்சரிக்கும் அவரது பொருளாதார ஆலோசகர்களும் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றி விட்டனர். முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி – 7.5% ஆக இருந்தது. தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி – 3.5% குறைந்து விட்டது : பணவீக்கம் – 3.5% லிருந்து தற்போது 7.5% ஆக அதிகரித்து விட்டது” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ‘இந்தியப் பொருளாதாரத்தை சீர் செய்வதற்கு அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்த எந்த திட்டமும் இல்லாமல் பிரதமரும் நிதியமைச்சரும் செயல்படுவதாகக்’ ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய எம்.பி. யுமான ராகுல் காந்தி பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே பொருளாதாரம் பற்றிய விவாதத்தைத் தொடங்கி இருக்கிறார். ‘பட்ஜெட் 2020’ ஹேஷ்டேக்குடன் பதிவிட்ட ராகுல் காந்தியின் டிவிட்டர் செய்தி தற்போது சமூக வலைத் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Modi & his dream team of economic advisors have literally turned the economy around.
— Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2020
Earlier:
GDP: 7.5%
Inflation: 3.5%
Now:
GDP: 3.5%
Inflation: 7.5%
The PM & FM have absolutely no idea what to do next. #Budget2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout