கருணாநிதி நலமுடன் உள்ளார். நேரில் சந்தித்த பின்னர் ராகுல்காந்தி பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோதும், அவரது இறுதிச்சடங்கின்போதும் சென்னை வந்த ராகுல்காந்தி, இருமுறையும் கூட்டணி கட்சி தலைவரான கருணாநிதியை சந்திக்கவில்லை
இதனால் திமுக தலைமை அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று ராகுல்காந்தி டெல்லியில் இருந்து கருணாநிதியை நலம் விசாரிக்க சென்னை வந்தார்.
கருணாநிதியை நேரில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய ராகுல்காந்தி, "தமிழக மக்களின் தலைவரான திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். விரைவில் உடல்நலன் பெற்று அவர் வீடு திரும்புவார். கருணாநிதி நலம் பெற காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று கூறினார்.
முன்னதாக ராகுல் காந்தி திமுக எம்.பி.,யும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மற்றும் திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் கே. ஆர். ராமசாமி ஆகியோரும் மருத்துவமனை சென்று இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout