இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம்… விளாசும் முன்னாள் வீரர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் படு சொதப்பலாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். இதையடுத்து தோல்விக்கான காரணங்களைச் சில முன்னணி வீரர்கள் அலசி வருவதும் குறிப்பிடத்தக்கது.
2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வீரர்கள் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் 202 ரன்களை குவித்திருந்தனர். இந்தப் போட்டியின்போது முன்னணி வீரர்களான ரஹானே, புஜாரா இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்களை ஷர்துல் தாகூர் வேட்டையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தென்னாப்பிரிக்க 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இயைதடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் என இரண்டு பேருமே சொதப்பலாக விளையாடினர். அடுத்துவந்த ரஹானே, புஜாரா தலா அரைச்சதத்தை விளாசியிருந்தனர். ஆனாலும் இந்த ரன்கள் அணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமையவில்லை.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது போல 3 ஆவது பந்திலேயே தூக்கியடித்து அவுட்டானார். இந்த விக்கெட் குறித்து கவாஸ்கர், கவுதம் கம்பீர் இருவரும் கடுமையாக விமர்சித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணி 266 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 240 என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா வெறும் 3 விக்கெட் இழப்பிற்குள் ரன்களை குவித்தது. இதனால் தென்னாப்பிரிக்கா-இந்தியா இருவருமே 1-1 என்ற சமநிலைலையில் இருந்து வருகின்றனர். வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறும் இறுதிப்போட்டியே யாருக்கு கோப்பை என்பதை தீர்மானிக்கும். தென்னாப்பிரிக்காவிடம் இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்லாத இந்தியா இந்தத் தொடரில் வெற்றிப்பெறுமா? என ரசிகர்கள் ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு கோலி இரண்டாவது போட்டியில் கலந்ததும் ஒருகாரணம். அணி வீரர்களுக்கு உற்சாகம் அளித்திருப்பார். மேலும் சிராஜ்க்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் விக்கெட் இழப்பிற்கு உதவியிருப்பார். அதேபோல ரஹானே, புஜாரா இருவரும் முதல் இன்னிங்ஸில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
மேலும் ரிஷப்பண்ட் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், கடைசி நாள் ஆட்டத்தில் பும்ரா சரியாக பந்து வீசியிருக்க வேண்டும் என எண்ணற்ற காரணங்களை முன்னாள் வீரர்கள் வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டின் பேட்டிங்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.
ரிஷப் பண்ட் நம்பிக்கையுடன் விளையாடுவார் என்று நமக்குத் தெரியும். இதனால் பல போட்டிகளில் அவர் வெற்றிப் பெற்றுத்தந்துள்ளார். ஆனால் இதுபோன்ற விளையாட்டு உக்திக்கு கால நேரங்கள் உண்டு. அதை அவர் சரிசெய்தே ஆக வேண்டும். இதனால் அணி நிர்வாகத்திடம் பேசி ரிஷப் பண்ட்டின் ஷாட் தேர்வுகளுக்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments