பயிற்சியாளர் பதவி… கடைசிவரை மௌனம் காத்த டிராவிட்டால் ஆடிப்போன பிசிசிஐ!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி கடந்த 2017 முதல் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பின் அவருடைய பணிக்காலம் முடிவடைகிறது. இதனால் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தால் அணியை நன்றாக வழிநடத்துவார் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பிசிசிஐயின் தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகிய இருவரும் ராகுல் டிராவிட்டை சந்தித்தாகவும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியது. இதையடுத்து பிசிசிஐ இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டு, கடைசி தேதி அக்டோபர் 27 என நியமித்திருந்தது.
ஆனால் நேற்று மதியம் வரை ராகுல் டிராவிட் இதற்காக விண்ணப்பிக்கவில்லை. இதனால் பதறிப்போன பிசிசிஐயின் நிர்வாகிகள் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதையடுத்து நேற்று மதியத்திற்கு மேல் டிராவிட் தரப்பு இந்தியக் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளருக்கு விண்ணப்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் டிராவிட்டே தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் கணிப்புகள் கூறப்படுகிறது.
இந்நிலையில் டிராவிட் ஏற்கனவே பதவி வகித்துவரும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பதவிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் பீல்டிங் கோச் பதவிக்கு அபேய் ஷர்மா, பௌலிங் கோச் பதவிக்கு பாஸ்மாம் பெரி ஆகியோர் விண்ணப்பித்து உள்ளனர்.
பிசிசிஐ இதற்கு முன்பு இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காக இலங்கை அணி வீரர் ஜெயவர்தனே, ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், விவிஎஸ் லக்ஷ்மன், அனில் கும்ப்ளே போன்றோரை அணுகியது. ஆனால் ரசிகர்கள் டிராவிட்டுக்கே வரவேற்பு அளித்த நிலையில் தற்போது பிசிசிஐயும் இந்த முடிவையே எடுக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments