சச்சின் தெண்டுல்கருடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளிவந்த சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் 14 வயது மகன் ஏ.ஆர்.அமீன் பாடியுள்ளதாக ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
'மர்த் மராதா' என்று தொடங்கும் இந்த பாடலை அமீன், அஞ்சலி கெய்க்வாட் அவர்களுடன் இணைந்து பாடியுள்ளார். சச்சினின் சிறுவயது காட்சிகளுடன் கூடிய இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருவதுடன் பாலிவுட் திரையுலகில் முதல் பாடலை பாடிய அமீனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
ஏற்கனவே அமீன், மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படதில் 'மெளலானா' என்ற பாடலையும், தெலுங்கில் நிர்மலா கான்வெண்ட்' என்ற படத்தில் ஒரு பாடலையும், 'கப்பிள்ஸ் ரிட்ரீட் என்ற ஆங்கில பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout