இசைப்புயலா? இளம் இசைப்புயலா? 'தளபதி 62' இசையமைப்பாளர் யார்?

  • IndiaGlitz, [Tuesday,November 28 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் வெற்றியை அடுத்து அவருடைய அடுத்த படமான 'தளபதி 62' திரைப்படம் வரும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஆகியோர் பணிபுரியவுள்ளதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 'மெர்சல்' படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதால் மீண்டும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவலும், விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவான 'கத்தி' படத்திற்கு இசையமைத்த இளம் இசைப்புயல் அனிருத் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக ஒரு தகவலும் வெளிவந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அனிருத் தற்போது சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', மற்றும் ஒரு தெலுங்கு படம் என பிசியாக இருப்பதால் மேலும் ஒரு படத்தில் கமிட் ஆவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தி 'கஜினி' படத்திற்கு ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சத்யம் சினிமா அதிபர் வீட்டில் வருமான வரி ரெய்டு

இன்று காலை சென்னை பெரம்பூரில் உள்ள சத்யம் S2 சினிமாஸ் தியேட்டர் அதிபர் வீடு மற்றும் அவருக்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அன்புச்செழியன் மீதான புகார் வாபஸ்: கந்துவட்டி வழக்கில் திடீர் திருப்பம்

இயக்குனர், நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பைனான்சியர் அன்புச்செழியனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருவது தெரிந்ததே.

அதிசயம் ஆனால் உண்மை: முதன்முதலாக இணையும் சிம்பு-தனுஷ்

தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜித் ஆகியோர்களை கூறுவதுண்டு. அதேபோல் சிம்பு-தனுஷ் ஆகியோர்களும் இரு துருவங்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

அணி மாறும் எம்பிக்கள்; காலியாகிறது தினகரன் கூடாரம்

அதிமுக, ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி, தீபா அணி என சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் தற்போது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த அதிமுகவாக உருவாகியுள்ளது.

மூன்றாம் உலக போரை உருவாக்க கூடிய எந்திர மனிதன் இவனா?

ரோபோ என்பது மனிதனால் தயாரிக்கப்பட்டாலும், நாளடைவில் மனிதனை விஞ்சும் அளவுக்கு திறமை படைத்ததாகவும், மனிதனையே அழிக்கும் திறமை படைத்ததாகவும் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை