பாடல்களே இல்லாத த்ரில் படத்தில் ரகுமான்
- IndiaGlitz, [Sunday,July 24 2016]
'நிலவே மலரே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கடந்த 30 ஆண்டுகளில் பல படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்தவர் ரகுமான். கடந்த ஆண்டு வெளியான '36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவின் கணவராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் தற்போது ரகுமான் ஒரு புதிய த்ரில் படத்தில் நடித்து வருகிறார். 'துருவங்கள் 16' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ட்ரீம் பேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை 21 வயது இளைஞரான கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் நேற்று இயக்குனர் கார்த்திக் நரேனின் பிறந்த நாள் படக்குழுவினர் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதுவொரு விறுவிறுப்பான த்ரில் படம் என்பதால் இந்த படத்தில் பாடல்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் 16 கேரக்டர்கள் இருப்பதாகவும், இந்த படம் 16 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை விவரிப்பதாகவும் இதன் காரணமாகவே இந்த படத்திற்கு 'துருவங்கள் 16' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு – சுஜித் சாரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பும், ஜேக்ஸ்பிஜாய் இசையமைக்கவும் செய்கின்றனர். இவர்கள் மூவருமே அருண்விஜய்யின் தாக்க தாக்க' படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..