close
Choose your channels

பாடல்களே இல்லாத த்ரில் படத்தில் ரகுமான்

Sunday, July 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'நிலவே மலரே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கடந்த 30 ஆண்டுகளில் பல படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்தவர் ரகுமான். கடந்த ஆண்டு வெளியான '36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவின் கணவராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் தற்போது ரகுமான் ஒரு புதிய த்ரில் படத்தில் நடித்து வருகிறார். 'துருவங்கள் 16' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ட்ரீம் பேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை 21 வயது இளைஞரான கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் நேற்று இயக்குனர் கார்த்திக் நரேனின் பிறந்த நாள் படக்குழுவினர் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதுவொரு விறுவிறுப்பான த்ரில் படம் என்பதால் இந்த படத்தில் பாடல்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் 16 கேரக்டர்கள் இருப்பதாகவும், இந்த படம் 16 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை விவரிப்பதாகவும் இதன் காரணமாகவே இந்த படத்திற்கு 'துருவங்கள் 16' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு – சுஜித் சாரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பும், ஜேக்ஸ்பிஜாய் இசையமைக்கவும் செய்கின்றனர். இவர்கள் மூவருமே அருண்விஜய்யின் தாக்க தாக்க` படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment