அஜித், விஜய், சூர்யாவின் ஒற்றுமையில் பங்கு கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Monday,October 23 2017]

ஒரு திரைப்படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் ஒரு நடிகர் நடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். சிவாஜி, கமல் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுக்கே இந்த பணி சவாலாக இருக்கும். இந்த நிலையில் சிவாஜி, கமல்ஹாசனை அடுத்து  அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோர்களும் மூன்று வேடங்களில் நடித்துள்ளனர். 

'வரலாறு' படத்தில் அஜித்தும், '24' படத்தில் சூர்யாவும், 'மெர்சல்' படத்தில் விஜய்யும் மூன்று வேடங்களில் நடித்துள்ளனர். இந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்று மூவருக்கும் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது என்பது ஒரு ஒற்றுமை என்றால் இந்த படங்களில் இன்னொரு ஒற்றுமையும் உள்ளது.

வரலாறு, 24, மெர்சல் ஆகிய மூன்று படங்களுக்கும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதுதான் அந்த இன்னொரு ஒற்றுமை. மேலும் மூன்று படங்களிலும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ரஹ்மான் பட்டையை கிளப்பியிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழிசை, எச்.ராஜா விக்கிபீடியா பக்கத்தில் கைவரிசை காட்டிய குசும்பர்கள்

பிரபலங்களின் விவரங்களை அறியும் இணையதளம் விக்கிபீடியாவில் யாருடைய பிரபலத்தின் பக்கங்களிலும் யார் வேண்டுமானாலும் எடிட் செய்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்யலாம்.

விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை? பின்னணி என்ன?

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழிசைக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன்

தமிழகத்தில் பாஜகவுக்கு என இருந்த ஒருசில ஓட்டுக்களையும் தமிழிசை செளந்தரராஜனும், எச்.ராஜாவும் 'மெர்சல்' விஷயத்தில் தேவையில்லாமல் வாயை கொடுத்து இழந்துவிட்டனர். 

'சாமி 2': த்ரிஷா எடுத்துள்ள அதிரடி, அதிர்ச்சி முடிவு

விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கிய 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமாகிய 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'மெர்சல்' படத்தின் மிரட்டலான 5 நாள் வசூல் விபரம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் மெர்சலான சென்னை ஓப்பனிங் வசூல் குறித்த விபரங்களை காலையில் பார்த்தோம். தற்போது இந்த படத்தின் தமிழக வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.