ராஜஸ்தான் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் நீக்கம்; புதிய கேப்டன் யார்?

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாகியதால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்மித், அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஐசிசியின் முடிவை பொறுத்தே அவர் மீது எந்தவகையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியிருந்தார்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாக தகவலின்படி ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஸ்மித் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரஹானே புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

More News

பாஜகவினர் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

'மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வது உங்களுக்கே கசந்துவிட்டதா?

நயன்தாரா ஒரு இரும்பு பெண்மணி: விக்னேஷ் சிவன் பெருமிதம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது கோலிவுட் திரையுலகினர் அனைவருக்கும் தெரிந்ததே.

முத்து நகரா? மூச்சு திணறும் நகரா? ஸ்டெர்லைட் குறித்து பிரபல நடிகர்

ஸ்டெர்லைட் பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு உயிர் கொல்லி நச்சுக் கழிவுகள் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் இதுவரை கலந்தனவோ தெரியவில்லையே?

சென்னை சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீவிபத்து

சென்னையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணா சாலையில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டிரைக்கை மீறி ரிலீஸ் ஆகிறதா நயன்தாரா படம்?

இதுவரை இல்லாத வகையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே வேலைநிறுத்தத்தில் கடந்த ஒரு மாதமாக வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை