இதை மட்டும் செய்ய மாட்டேன்: ஸ்போர்ட்ஸ்மேன் மட்டுமல்ல ஜெண்டில்மேன் என நிரூபித்த ரஹானே!
- IndiaGlitz, [Friday,January 22 2021] Sports News
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்த நிலையில் கடைசியாக முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வென்று இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாக இருந்தார் என்பதும் அதன் பின்னர் அவர் இந்தியா திரும்பியதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக ரஹானே இருந்து வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
ரஹானாவின் சிறப்பான கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்து அணியை வெற்றிகரமாக வழிநடத்தி தொடரையும் வென்று வரலாற்று சாதனை செய்துள்ளார் ரஹானே. இதனை அடுத்து மும்பை திரும்பிய ரஹானாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஹானாவை உற்சாகமாக வரவேற்ற அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேக் ஒன்றை வெட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கேக்கை ரஹானா வெட்ட முயற்சித்த போது அதில் கங்காரு உருவம் இருந்ததை பார்த்ததும் அந்த கேக்கை வெட்ட மறுத்து உள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய விலங்கு கங்காரு என்பதால் அந்த கங்காரு உள்ள கேக்கை வெட்டினால் ஆஸ்திரேலியாவை அவமானப்படுத்துவதற்கு சமம் என்றும் அதனால் இதை மட்டும் நான் செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார்
இதனை அடுத்து அவர் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன் மட்டுமின்றி சிறந்த ஜென்டில்மேன் என்றும் நிரூப்பித்துள்ளார் என ஊடகங்கள் அவரை போற்றி பாராட்டி வருகின்றனர்
He didn't cut the cake with kangaroo on the top.
— Harsh Patel (@hjpatel28) January 22, 2021
Gentleman on and off the field.@ajinkyarahane88#Rahane #KangarooCake #INDvsAUS pic.twitter.com/Bwi8Oog3IQ