விராட் கோலி மீது 2 மூத்த வீரர்கள் புகார் கூறினார்களா? பகீர் ரிப்போர்ட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷாவை தொடர்பு கொண்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியைப் பற்றி சக வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் புகார் தெரிவித்ததாக ஆங்கில நாளேடு ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்த புகாரின் அடிப்படையில்தான் கோலி டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார் என்பது போன்ற கருத்துகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் புஜாரா, ரஹானே பெயர்களும் கோலி விஷயத்தில் அடிபடுவது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அதாவது உலகச் சாம்பியன்ஷிப் போட்டியைப் பொறுத்தவரையில் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் “இதுவும் மற்ற டெஸ்ட் போட்டிகளைப் போன்றதுதான். கடந்த இரண்டரை வருடங்களாக எண்ணற்ற போட்டிகளில் விளையாடி வருகிறோம். இந்தப் போட்டியின் வெற்றியோ அல்லது தோல்வியோ இந்திய அணியின் மதிப்பை கெடுத்துவிடாது என மட்டம்தட்டுவது போன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தனர்.
இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின்போது நட்சத்திர வீரர்களான புஜாரா முதல் இன்னிங்ஸில் 54 பந்துகளுக்கு 8 ரன்னையும் அடுத்து இன்னிங்ஸில் 80 பந்துகளுக்கு 15 ரன்களையும் எடுத்திருந்தார். அதேபோல ரஹானே முதல் இன்னிங்ஸில் 115 பந்துகளுக்கு 49 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 40 பந்துகளுக்கு 15 ரன்களையும் எடுத்திருந்தார். இதனால் இந்திய அணி படு சொதப்பலாகத் தோல்வியடைந்ததும் நியூசிலாந்து கோப்பையை சுமந்து சென்றதும் நமக்குத் தெரிந்ததுதான்.
இதனால் போட்டி முடிந்தவுடன் கேப்டன் விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் “பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் விளையாட வேண்டும். அவுட் ஆகிவிடுவோம் என நினைத்து பவுலர்களை பார்முக்கு கொண்டுவரக்கூடாது” என அதிருப்தியுடன் கருத்துத் தெரிவித்து இருந்தார்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான புஜாரா, ரஹானே இருவரும் பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷாவை தொடர்பு கொண்டு கோலி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து பிசிசிஐ மற்ற வீரர்களிடம் இதுகுறித்து கருத்துக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படி கோலியின் கேப்டன்ஷி குறித்த விஷயங்கள் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில் அவருடைய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்ஷி பதவிக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்பது போன்ற பேச்சுகளும் தொடரத்தான் செய்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments