கேப்டன் ரஹானேவை திடீரென கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்: காரணம் இதுதான்!

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்தியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்தபோது முதல் டெஸ்ட்டில் மட்டும் விளையாடி விட்டு கேப்டன் விராத் கோஹ்லி நாடு திரும்பினார். இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று, அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்ற பெருமை ரஹானேவை சேரும் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும் அனுபவம் இல்லாத இளம் அணியை வைத்து ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென சூர்யா ரசிகர்கள் ரஹானேவை கொண்டாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவராக சென்னைக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்

அந்த வகையில் ரஹானே இன்று சென்னை வந்தபோது செய்தியாளர்கள் அவரிடம் ’உங்களுக்கு பிடித்த தமிழ் படம் எது? என்று கேட்டனர். அதற்கு ’சமீபத்தில் நான் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் பார்த்தேன். அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று கூறினார். இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் அவர் ’மாஸ்டர்’ படத்தையும் பார்ப்பார் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

More News

மாலையும் கழுத்துமாய் மணக்கோலத்தில் சோம்-ரம்யா: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட சோம் மற்றும் ரம்யா திடீரென மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஆப்பிள் தயாரிப்புகளின் புதிய மையமாகிறது தமிழகம்- முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!

நேற்று தமிழக அமைச்சரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் 52 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 சிறுவர்கள்… பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண்மணி ஒருவரை 5 சிறுவர்கள்

என் பலம் என்னன்னு எனக்கே இப்பதான் தெரியுது: பிக்பாஸ் வின்னர் ஆரி!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் ஆரி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் 'என் பலம் என்னன்னு எனக்கே தெரிஞ்ச ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் என்று கூறியுள்ளார் 

கமல் கட்சியுடன் கூட்டணி சேரும் டெல்லி கட்சி: பிப்ரவரி 21ல் அறிவிப்பா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி