ரகுவரன் இன்று உயிருடன் இருந்திருந்தால்.. நினைவு தினத்தில் மனைவி ரோகிணியின் நெகிழ்ச்சியான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு இதே நாளில் காலமான நிலையில் அவரது நினைவு தினத்தில் அவரது மனைவி நடிகை ரோகினி நெகிழ்ச்சியான பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 1982 ஆம் ஆண்டு ’ஏழாவது மனிதன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் ரகுவரன். அதன் பிறகு அவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் பல படங்களில் வில்லன் மற்றும் குண சித்திர வேடங்களில் நடித்துள்ளார்
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் அவரது படங்கள் பல படங்கள் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி உடல் நலக்குறைவால் ரகுவரன் காலமானார். அவரது மறைவு தமிழ் திரை உலகை அதிர்ச்சி அடையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரகுவரன் மறைந்த 15-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவரது மனைவி ரோகிணி தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாள் ஒரு சாதாரண நாளாக தொடங்கி எனக்கும் எனது மகனின் வாழ்க்கையை மாற்றிய நாளாக அமைந்தது. ரகுவரன் இன்று உயிரோடு இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை விரும்பி இருப்பார். மேலும் அவர் ஒரு நல்ல நடிகராகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.
March 19th 2008 started as a normal day but changed everything for me and Rishi. Raghu would have loved this phase of cinema so much and he’d have been happier as an actor too✨ pic.twitter.com/Suq1zCTy3v
— Rohini Molleti (@Rohinimolleti) March 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments