குப்பையை பொறுக்கி சம்பாதித்த பணத்தில் தனக்கு தானே சிலை வடித்த சுவாரசிய மனிதர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சேலம் அருகே சாலையில் குப்பையைப் பொறுக்கி சம்பாதித்த பணத்தில் ஒருவர் தனக்கு தானே சிலை வடித்து இருக்கிறார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அந்த நபர் என்னுடைய வாழ்நாள் முழுக்க சம்பாதித்த பணத்தை வைத்து நான் சிலை வடித்து இருக்கிறேன். இது என்னுடைய கனவு என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
சேலம் அத்தனூர் பட்டியில் வசித்து வந்த அந்த நபர் குடும்பத்தை விட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றிருக்கிறார். அடுத்து சேலம் மாநகரப் பகுதிகளில் தினமும் குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் போன்றவற்றை பொறுக்கி தினமும் ரூ. 200-300 வரை சம்பாதித்து இருக்கிறார். தற்போது 2 நிலங்களைச் சொந்தமாக வாங்கியிருக்கம் அவர் தன்னுடைய சொந்த நிலத்தில் தனக்குத் தானே செலவு செய்து சிலையும் வைத்திருக்கிறார்.
இதுவரை நிலம் மற்றும் சிலை வடிவமைப்பு என ரூ 10 லட்சத்தை செலவு செய்திருக்கிறார். மேலும் இந்தத் தொகையை தனது வாழ்நாள் முழுக்க சம்பாதித்த பணம் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடவும் அவர் திட்டமிட்டு இருக்கிறாராம். வாழப்பாடி அருகே வைக்கப்பட்டுள்ள சிலையை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடம் பார்த்து செல்கின்றனர். தனக்குத் தானே சிலை வடித்துக் கொண்ட மனிதரைப் பார்த்து சிலர் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்து கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com