பெரிய தப்பை தடுக்க சின்ன தப்பு பண்றது தப்பே இல்லை.. 'ரகு தாத்தா' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,July 31 2024]

கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகு தாத்தா’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வழியாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

காமெடி, இந்தி எதிர்ப்பு, ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு படமாக உள்ளது என்பது இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக கீர்த்தி சுரேஷ் மற்றும் தேவதர்ஷினி காமெடி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ், எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஜெயக்குமார், ராஜூ ரவீந்திரன் உள்பட பலர் நடிப்பில் உருவாக்கிய இந்த படத்தை சுமன் குமார் என்பவர் இயக்கி உள்ளார். சீன் ரோல்டன் இசையில் அமைந்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ’தங்கலான்’ மற்றும் ’டிமான்டி காலனி’ ஆகிய படங்களுடன் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த காலகட்டத்தில் இந்த கதை நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. ’இதையெல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால் இந்தி தெரியாது போயா என்று சொல்லுவோம்’ என்ற கீர்த்தி சுரேஷ் வசனமும் இந்த படத்தில் உள்ளது.