close
Choose your channels

ஐ.பி.எஸ் அதிகாரி வேடத்தில் ராகவா லாரன்ஸ்?

Sunday, October 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஞ்சனா 2' என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் ராகவா லாரன்ஸ் இரண்டு படங்களில் நடித்து இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். காஜல் அகர்வாலுடன் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திலும், 'நாகா' என்ற பாம்பு கதையம்சம் கொண்ட படத்திலும் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது இன்னொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜீவா நடித்த 'சிங்கம் புலி' பட இயக்குனர் சாய் ரமணி இயக்கவுள்ள இந்த படம், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'பட்டாஸ்' படத்தின் தமிழ் ரீமேக் படம் என்றும், இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களது தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment