'காஞ்சனா' இந்தி ரீமேக்கில் இருந்து வெளியேறிய ராகவா லாரன்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார், கைரா அத்வானி, மாதவன் நடிப்பில் உருவாகி வரும் 'காஞ்சனா' திரைப்படத்தின் இந்தி ரீமேக் படமான 'லட்சுமி பாம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக ராகவா லாரன்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஒரு படைப்பாளிக்கு பணம், புகழை விட தன்மானம் தான் முக்கியம் என்றும், 'லட்சுமி பாம்' படப்பிடிப்பின்போது ஒருசில கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நேற்று வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தன்னுடைய பார்வைக்கு வராமலேயே வெளிவந்துவிட்டதாகவும், ஒரு படைப்பாளியாக தான் இந்த விஷயத்தில் அவமதிப்பு செய்யப்பட்டதாகவும் கூறிய ராகவா, அந்த போஸ்டரின் டிசைன் தனக்கு திருப்தி இல்லை என்றும், இதன் காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் அக்சயகுமார் மீது தான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும், அவரது இந்த படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துவிட்டு விலகிவிட்டதாகவும் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தை வேறு ஒரு இயக்குனர் இயக்குவார் என தெரிகிறது.
Dear Friends and Fans..!I
— Raghava Lawrence (@offl_Lawrence) May 18, 2019
In this world, more than money and fame, self-respect is the most important attribute to a person's character. So I have decided to step out of the project, #Laxmmibomb Hindi remake of Kanchana@akshaykumar
@RowdyGabbar @Advani_Kiara pic.twitter.com/MXSmY4uOgR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com