ராகவா லாரன்ஸ் மாணவர்களை கவர்ந்த 'புலி'

  • IndiaGlitz, [Friday,October 09 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களின் அமோக ஆதரவால் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தை கோலிவுட் திரையுலக விஐபிக்கள் பலர் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் நண்பர் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் டிரஸ்ட்டில் படிக்கும் மானவ, மாணவியர்கள் நேற்று 'புலி' படத்தை பார்த்துள்ளனர். 'புலி' படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் படம் குறித்து கருத்து கூறியபோது, ''புலி'' படத்தை மிகவும் ரசித்ததாகவும், படத்தில் வரும் தவளை, பேசும் பறவை, ராட்சத ஆமை அனைத்தும் தங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறினர். மாணவ, மாணவிகள் அனைவருமே இந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்ததாக கூறப்படுகிரது.

மேலும் புலி' படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களின் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், வசூலும் திருப்திகரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

More News

சிம்புவுக்கு வடிவேலு கூறிய அறிவுரை

நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் சிம்பு, விஷாலை நரி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

சமாதானத்திற்கு தயாரா? விஷாலின் அதிரடி முடிவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை தவிர்க்க சரத்குமார் மற்றும் விஷால் ஆகிய இரு அணிகளையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள்...

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சங்களை கொடுத்திருந்தபோதிலும்...

நடிகர் சங்க தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த விஜயகாந்த்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் ...

சமாதான பேச்சுவார்த்தை குறித்து பாண்டவர் அணி எடுத்த முக்கிய முடிவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும்...