சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'மூன்று முகம்' ரீமேக்கில் பிரபல நடிகர்
Thursday, November 3, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1982ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் 'மூன்று முகம். அருண், ஜான், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய மூன்று வித்தியாசமான வேடங்களில் ரஜினிகாந்த் அசத்தியிருப்பார். குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் கேரக்டர் இப்போதும் போலீஸ் வேடத்தில் நடிப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்
இந்நிலையில் 34 வருடங்கள் கழித்து இந்த படம் தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், ரஜினி நடித்த மூன்று வேடங்களில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 'ஜிகர்தண்டா' படத்தை தயாரித்த ஸ்ரீ மீனாட்சி கிரியேசன்ஸ் எஸ்.கதிரேசன் இந்த பட தயாரிப்பில் உறுதுணையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments