இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஓபிஎஸ்-ராகரா லாரன்ஸ் சந்திப்பு

  • IndiaGlitz, [Monday,February 13 2017]



தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு என்று விடை கிடைக்கும் என்று தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இரு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக தலைவர்கள் சசிகலாவுக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், திரையுலகினர் மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள் அவரது இல்லத்தை தேடி வந்து தினந்தோறும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை பிரபல நடிகரும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவருமான ராகவா லாரன்ஸ் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் இவர் முதல்வரை சந்திப்பது வேறு ஒரு காரணத்திற்காக என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு வெற்றி கொண்டாட்டத்தை லாரன்ஸ் அவர்கள் வரும் 18ஆம் தேதி மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை அனைவரும் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ, அலைபேசியில் டார்ச் அடித்தோ அல்லது மெழுகுவர்த்தி ஏந்தியோ அமைதியாக கொண்டாடுவோம் என்று அறிவித்துள்ளார். இந்த கொண்டாட்டத்திற்கு முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவே இன்னும் சற்று நேரத்தில் ராகவா லாரன்ஸ் முதல்வரை சந்திக்கவுள்ளாராம்.

முதல்வரை மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பல தலைவர்களையும் ராகவா லாரன்ஸ் சந்திக்க திட்டமிட்டுள்ளாராம். அவரது சந்திப்பு லிஸ்ட்டில் சசிகலா பெயர் உள்ளதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நாளை தீர்ப்பு உறுதி. அதிகாரபூர்வமான தகவல்

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை காலை 10.30 தீர்ப்பு வெளிவரவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது...

ஆளுனருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய அதிரடி யோசனை

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணக்கூடிய இடத்தில் இருக்கும் ஒரே நபரான தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் தனது முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது...

தமிழக உளவுத்துறை தலைவர் திடீர் மாற்றம்

கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் புயல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழக உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஐபிஎஸ் திடீரென மாற்றப்பட்டுள்ளார்...

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி?

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் எப்போது தீர்வு சொல்வார் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த குழப்பத்திற்கு விடை நாளை சுப்ரீம் கோர்ட் மூலம் கிடைத்துவிடும் என தெரிகிறது...

கூவத்தூரில் தங்குகிறார் சசிகலா. எம்.எல்.ஏக்கள் சென்னை வருவது எப்போது?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுக எம்.எல்.ஏக்களை கடந்த ஒரு வாரமாக ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் சொகுசு ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளார். நேற்று மற்றும் நேற்று முன் தினம் என இரண்டு நாட்கள் கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்த சசிகலா, இன்று மீண்டும் மூன்றாவது நாளாக அங்கு செல்கிறார்...