close
Choose your channels

பேய்க்கு பதில் பாம்பு: ராகவா லாரன்ஸின் புதிய திட்டம்

Saturday, April 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. இருப்பினும் 'காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் போலவே இந்த படமும் இருப்பதாக சில விமர்சனங்களில் குறையாக சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படத்தில் பேய்க்கு விடை கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

எனவே ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தில் பேய்க்கு பதில் 'பாம்பு' தான் மெயின் கேரக்டராக இருக்கும் என்றும், இந்த படத்திற்கு 'காலபைரவா' என்ற டைட்டிலையும் அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 'நீயா', 'மனைவி ஒரு மாணிக்கம்' போன்ற பாம்பு பழி வாங்கும் படங்கள் தமிழில் வந்திருந்தாலும் ராகவா லாரன்ஸ் தனது டிரேட் மார்க் முத்திரையான காமெடி கலந்த த்ரில் படமாக இந்த படத்தையும் உருவாக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

'காஞ்சனா 3' படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் தற்போது 'காஞ்சனா' இந்தி படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.