ராமர் கேரக்டரில் நடித்த பிரபாஸுக்கு நன்றி: பிரபல தமிழ் திரையுலக பிரபலம் ட்வீட்..!

  • IndiaGlitz, [Thursday,June 08 2023]

பிரபாஸ் ராமர் கேரக்டரில் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என திரையுலக பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’தி காஷ்மீர் தயாரிப்பாளர்’ ’ஆதிபுருஷ்’ படத்தின் பத்தாயிரம் டிக்கெட்டுக்களை இலவசமாக பள்ளி குழந்தைகள், முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் உள்ளவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் இந்த படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராமர் கேரக்டரில் நடித்த பிரபாஸுக்கு நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’ஒட்டுமொத்த ’ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள், ஒரு பான் இந்திய நடிகராக இருந்து கொண்டு ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடித்துள்ள பிரபாஸுக்கு என்னுடைய நன்றி. இளைய தலைமுறைக்கு இராமாயணத்தை கொண்டு போய் சேர்ப்பது மிகப்பெரிய சாதனை, இந்த படம் பிரமாண்டமாக வெற்றியடைய நான் பிரார்த்தனை செய்கிறேன், ஹரே ராம்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

விஜய் பிறந்த நாளில் 'லியோ', 'தளபதி 68' அப்டேட்.. டபுள் விருந்துக்கு தயாரா?

தளபதி விஜய் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் 'லியோ' படத்தின் அப்டேட் மற்றும் 'தளபதி 68' படத்தின் அப்டேட் என இரண்டு விருந்துகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக

ரஜினியிடம் இருந்து கிடைத்த மறக்க முடியாத பரிசு.. தமன்னா நெகிழ்ச்சி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் முதல் முதலாக ரஜினியுடன் இணைந்து நடித்த தமன்னா,

புல்வெளி தரையில் ப்ளூ நிற நீச்சல் உடை… வேறலெவல் கிளாமரில் நடிகை ரைசா வில்சன்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது யாதார்த்தமான கேரக்டர் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் ரைசா வில்சன்

எனக்கு ரொம்ப பிடித்தது இதுதான்… நடிகை தமன்னா பகிர்ந்த சுவாரசியமான தகவல்!

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என்று இந்திய அளவில் பிரபல நட்சத்திரமாக இருந்துவரும் நடிகை தமன்னா பற்றிய தகவல்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் படு சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது

48 வயது ‘ஸ்லிம் பியூட்டி‘ நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பிறந்தநாள்… வாழ்த்தும் ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்னர் இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி