ராமர் கேரக்டரில் நடித்த பிரபாஸுக்கு நன்றி: பிரபல தமிழ் திரையுலக பிரபலம் ட்வீட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் ராமர் கேரக்டரில் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என திரையுலக பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ’தி காஷ்மீர் தயாரிப்பாளர்’ ’ஆதிபுருஷ்’ படத்தின் பத்தாயிரம் டிக்கெட்டுக்களை இலவசமாக பள்ளி குழந்தைகள், முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் உள்ளவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் இந்த படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராமர் கேரக்டரில் நடித்த பிரபாஸுக்கு நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’ஒட்டுமொத்த ’ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள், ஒரு பான் இந்திய நடிகராக இருந்து கொண்டு ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடித்துள்ள பிரபாஸுக்கு என்னுடைய நன்றி. இளைய தலைமுறைக்கு இராமாயணத்தை கொண்டு போய் சேர்ப்பது மிகப்பெரிய சாதனை, இந்த படம் பிரமாண்டமாக வெற்றியடைய நான் பிரார்த்தனை செய்கிறேன், ஹரே ராம்’ என்று பதிவு செய்துள்ளார்.
My wishes to the entire #Adipurush team and Thanks to @PrabhasRaju for playing the role of Rama by being a pan-India star. Reaching out the epic Ramayana to today’s generation is the biggest achievement of all. My prayers for the movie’s massive success #HareRam pic.twitter.com/EkqdwdHGbS
— Raghava Lawrence (@offl_Lawrence) June 7, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com