close
Choose your channels

சூர்யாவின் 'எஸ் 3' உடன் மோதுகிறதா பிரபல நடிகரின் படம்?

Wednesday, December 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதலில் டிசம்பர் மாதத்திலும் பின்னர் பொங்கல் திருநாளிலும் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட சூர்யாவின் 'எஸ் 3' தற்போது ஜனவரி 26-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26-ல் 'எஸ் 3' திரைப்படம் பெரிய போட்டி இல்லாமல் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இன்னொரு பெரிய படமும் அதே நாளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 'காஞ்சனா' படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'சிவலிங்கா' படம்தான் ஜனவரி 26-ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படம் ஜனவரியில் வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே பெண்டிங் இருப்பதாகவும், ஜனவரி 26-ல் வெளியிட அனைத்து முயற்சிகளும் செய்து கொண்டிருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பி.வாசு இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment