ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார். ராகவா லாரன்ஸ் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,March 09 2017]

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'மொட்டசிவா கெட்ட சிவா' படத்தின் டைட்டிலில் அவர் பெயருக்கு முன்னாள் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற அடைமொழி உள்ளது.
இந்த படத்தை இன்று பார்த்தவர்கள் இந்த பட்டம் குறித்து தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். டைட்டிலில் தனது பெயருக்கு முன்னாள் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் என்னுடைய அனுமதியில்லாமல் படக்குழுவினர்களே போட்டுள்ளனர். இது போன்ற எந்தவொரு பட்டத்தையும் நான் விரும்பியதில்லை.
ஒரு ரஜினி ரசிகனாக நான் சொல்வது என்னவெனில் 'ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார், அவரை தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டாராக முடியாது' என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக ராகவா லாரன்ஸ் சமூக நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அவர் கொடுத்த ஆதரவு மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்நிலையில் படக்குழுவினர் அவருடைய சமூக சேவையை பாராட்டும் வகையில் இந்த பட்டத்தை அவருக்கு பெயருக்கு முன்னால் போட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More News

விஷாலிடம் விஷம் இருப்பது உண்மைதான். மிஷ்கின் அதிரடி பேச்சு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் ஐந்து அணியினர்களும் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஜெயேந்திரருடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! பாஜகவுக்கு தூது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் காஞ்சி சங்கராச்சாரியர்களான ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர்களுக்கும் இடையே சிலகாலம் நல்லுறவு இருந்தாலும் பின்னர் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிப்பு. தீபா போட்டியிடுவாரா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அவருடைய மரணம் காரணமாக கடந்த சில மாதங்களாக காலியாகவுள்ளது.

வரலட்சுமியின் 'சேவ் சக்தி'க்கு ஆன்லைனில் ஆதரவு கொடுப்பது எப்படி?

பிரபல நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் நடிகைகள் இடையே பல விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? தாங்குமா சசிகலா அதிமுக!!

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா அணியின் மூத்த உறுப்பினர்கள் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆலோசனை கூறினார்களாம்...