ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் சம்பளத்தில் ரூ.3 கோடியை நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Thursday,April 09 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ‘சந்திரமுகி 2’ படத்தில் தான் நடிக்கவிருப்பதாகவும் அதற்காக கிடைக்கும் சம்பளத்தில் அட்வான்ஸ் பணம் ரூபாய் 3 கோடியை பெற்று கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக வழங்க உள்ளதாகவும் நடிகரும் நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ’அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக ’சந்திரமுகி 2’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ’சந்திரமுகி’ படத்தின் அடுத்த பாகமான இந்த படத்தை பி.வாசு இயக்க உள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தலைவர் ரஜினியின் அடுத்த படமான ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் நன்றி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ரூபாய் மூன்று கோடி அட்வான்ஸ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக வழங்க உள்ளேன்


ரூபாய் 50 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், ரூபாய் 50 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கும், ரூபாய் 50 லட்சம் பெப்சி அமைப்புக்கும், ரூபாய் 50 லட்சம் நடன இயக்குனர்கள் சங்கத்திற்கும், ரூபாய் 25 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் மற்றும் ரூபாய் 75 லட்சம் தான் பிறந்து வளர்ந்த பகுதியான ராயபுரம் பகுதியில் இருக்கும் தினக்கூலி பணி செய்யும் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்

ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 'பிகில்' தயாரிப்பு நிறுவனம் கொடுத்த தொகை

தளபதி விஜய் நடித்த 'பிகில்' உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி கொடுத்த பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சினிமா தொழிலாளர்கள் முற்றிலும் வேலை இன்றி, பசியும் பட்டினியும் உள்ளனர்

மற்ற கிருமிநாசினியை விட, சோப் ஏன் நல்லது???

கொரோனா பரவலைத் தடுப்பதில் ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினிப் பொருட்களைவிட சோப்புகள் அதிக திறனுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது

ஏப்ரல் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: மாநில அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

சென்னையில் எந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகம்? 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 738 பேராக இருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது