பிறந்த நாள் அன்று ராகவா லாரன்ஸ் இந்திய அளவில் செய்த சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது பிறந்தநாளில் ராகவராலன்ஸ் செய்த சாதனை ஒன்று இந்திய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ் அவர்கள் ஒரு தீவிர ராகவேந்திரர் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்ரீராகவேந்திர சுவாமி சிலையை ராகவா லாரன்ஸ் நிறுவியுள்ளார். இந்த சிலை 15 அடி நீள மார்பிள் கற்களால் ஆனது என்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சுவாமி சிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரா சிலை நிறுவ வேண்டும் என்பது தனது கனவு என்றும் அது தற்போது நனவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மிக விரைவில் இந்த சிலை பொதுமக்கள் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்க ராகவாலாரன்ஸ் திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தற்போது ’ருத்ரன்’ ‘அதிகாரம்’ மற்றும் ’துர்கா’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Sri Raghavendra Swamy’s biggest statue in India!! pic.twitter.com/Q5DzW2Gd35
— Raghava Lawrence (@offl_Lawrence) October 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments