மருத்துவமனையில் இருந்து மீண்டும் போராட்டக்களத்திற்கு திரும்பிய ராகவா லாரன்ஸ். சல்யூட்

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

சென்னை மெரீனாவில் கடந்த ஐந்து நாட்களாக இரவு பகல் பாராது, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது தன்னலமின்றி ஜல்லிக்கட்டு என்ற தமிழினத்தின் அடையாளத்திற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கோலிவுட் திரையுலகினர்களின் முழு ஆதரவு இருந்தபோதிலும் ராகவா லாரன்ஸ் போன்ற ஒருசில நடிகர் களத்தில் இறங்கி இளைஞர்களை ஊக்குவித்து வருவதோடு, போராட்டக்காரர்களுக்கு தேவையான வசதியையும் செய்து தருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் ராகவா லாரன்சுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முதல்கட்ட சிகிச்சை அளித்து பூரண ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர்.

ஆனால் தமிழ் உணர்வும், போராடும் இளைஞர்களுக்கு உதவும் எண்ணவும் கொண்ட ராகவா லாரன்ஸ் ஓய்வு எடுக்காமல் மீண்டும் மெரீனாவின் போராட்டக்களத்திற்கு வந்துள்ளார். உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் போராட்ட களத்தில் மீண்டும் இணைந்துள்ள ராகவா லாரன்சுக்கு இளைஞர்களின் சார்பில் ஒரு சல்யூட்.....

More News

வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி மாணவ, மாணவிகள் போராட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி பல நல்ல விஷயங்களுக்கு வழிகாட்டியாக அமைந்து வருகிறது. தங்களுக்காக உண்மையாக போராட ஒரு கூட்டம் இருக்கின்றது என்று பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது....

சுத்த தமிழில் வாழ்த்து கூறிய மலையாள சூப்பர் ஸ்டார்

ஜல்லிக்கட்டுக்காக அலைகடலென இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரீனாவில் திரண்டு கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்...

சூர்யாவின் 'சி3' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சிங்கம், சிங்கம் 2 வெற்றி படங்களை அடுத்து மூன்றாம் பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

மெரீனா ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இளையதளபதி விஜய்

ஜல்லிக்கட்டு நடத்த தேவையான அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் கடந்த ஐந்து நாட்களாக சென்னை மெரீனாவில் போராடி வருகின்றனர்...

'ஊக்கமது கைவிடேல்' ஜல்லிக்கட்டு போராளிகளுக்கு கமல் வாழ்த்து

உலக நாயகன் கமல்ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே...