ஜல்லிக்கட்டு மாணவர்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் செய்த உலக சாதனை
- IndiaGlitz, [Sunday,February 19 2017]
கடந்த மாதம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் உலகின் கவனத்தை மெரீனா நோக்கி திரும்ப வைத்தது. இந்த போராட்டத்தின் பயனாக மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டுக்காக பிரத்யேக சட்டம் இயற்றி வெற்றிகரமாக ஜல்லிக்கட்டும் இவ்வாண்டு நடந்து முடிந்தது.
இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருமே ஆதரவு கொடுத்தனர். அவர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை நேற்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி மாணவர்களுடன் இணைந்து கொண்டாடவுள்ளதாக ஏற்கனவே ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை 1200 கிலோ பிரமாண்டமான கேக் வெட்டி ராகவா லாரன்ஸ் மற்றும் ஜல்லிக்கட்டு இளைஞர்கள் கொண்டாடினார்கள். இதற்கு முன்னர் 1040 கிலோ கேக் தான் உலக சாதனையாக பதிவான நிலையில் அதை முறியடிக்கும் வகையில் நேற்றைய கொண்டாட்டத்தில் 1200 கிலோ அளவில் கேக்கை வெட்டி கொண்டாடிஉலக சாதனை படைத்துள்ளனர்.
மேலும் விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், 'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பங்களுக்கு தான் ஒரு மகனாக இருந்து அந்த குடும்பத்தின் குழந்தைகள் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும், அவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும் கூறினார்.