பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜி.வி.பிரகாஷ்-ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Monday,January 23 2017]

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை மெரீனாவில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் ஒருசில இடங்களில் போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர். இதனால் மெரீனா உள்பட சென்னையின் ஒருசில பகுதிகளில் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு கடந்த ஒருவாரமாக முழு ஒத்துழைப்பு கொடுத்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் ராகவா லாரன்ஸ், மாணவர்களின் நிலையை அறிய மெரினா செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் பாதியிலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இருப்பினும் ராகவா லாரன்ஸ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் அந்த இடத்தை விட்டு அகலாமல் போலீசார் உடன் பேச்சுவார்த்தை நடத்தி மெரின்னாவுக்கு செல்ல முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களை வெளியேற்ற காவல்துறை முயற்சி செய்தால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோம் என மாணவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதால் காவல்துறை தரப்பு தற்போது போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

More News

என் இதயம் மெரீனாவில்தான் உள்ளது. மருத்துவமனையில் இருந்து ராகவா லாரன்ஸ் தகவல்

சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்து வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்பட பல வசதிகளை தனது சொந்த செலவில் செய்து கொடுத்தார்...

மெரீனாவுக்கு செல்லும் பாதைகள் முடக்கம். திருவல்லிக்கேணியில் போலிசார் தடியடி.

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டாவைத் தடை செய்யக்கோரியும் கடந்த ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சென்னை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வெளியேற்றி வருகின்றனர்.

இளையதளபதியின் 'பைரவா' சென்னை வசூல் குறித்த தகவல்

ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விபரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்ததால் திரையரங்குகளில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

நானும் தமிழ் பொறுக்கிதான். ஆனால் டெல்லியில் பொறுக்க மாட்டேன். கமல்ஹாசன்

கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலக நாயகன் கமல்ஹாசன் தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழர்களை பொறுக்கி என கூறிய பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியம் சுவாமிக்கு நேற்று நடந்த விழா ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார்.

பீட்டா ராதாராஜனுக்கு நடிகர் சதீஷ் பதிலடி

நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'ராதாராஜன் அவர்களே உங்கள் வீட்டு பெண்கள் மெரீனா வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பவர்கள் எங்கள் தமிழ் இளளஞர்கள். எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார்...