ஒரே நாளில் 2 புதிய படங்கள்.. லோகேஷ் படத்தை அடுத்து இன்னொரு ராகவா லாரன்ஸ் படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் லோகேஷ் நாகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக இன்று காலை செய்தி வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இன்னொரு படத்தின் அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு ’ஹண்டர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்க இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்த படம் ராகவா லாரன்ஸின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாக இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
. @offl_Lawrence in a never before Action Adventure, #HUNTER 🧨🔥
— Sathya Jyothi Films (@SathyaJyothi) April 14, 2024
Producers @GTelefilms @imManishShah & @SathyaJyothi
Directed by @ivenkatmohan
A @ThisIsDSP Musical#RL25 #RAGHAVALAWRENCE25
@omdop @sreekar_prasad @KKadhirr_artdir
@supremesundar
#THEBATTLEFORTHESOUL pic.twitter.com/bEtPAQg8Cx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com