கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண நிதியளிக்கும் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Thursday,August 23 2018]

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை, உடைமைகளை, உறவினர்களை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதிகள் போல் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவுக்கு கோலிவுட் திரையுலகினர் கடந்த சில நாட்களாக தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர், டான்ஸ் மாஸ்டர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ், கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் தன்னை மிகவும் பாதித்ததாகவும், கேரள மக்களின் துயர் துடைக்க தானே களத்தில் இறங்கி மீட்புப்பணி மற்றும் உதவி செய்ய முடிவு செய்ததாகவும், ஆனால் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இது சாத்தியமில்லை என்று அங்குள்ள தனது நண்பர்கள் கூறியதால் மழை நிற்கும் வரை காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது மழை நின்றபோதிலும் எந்த பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அரசுக்கு மட்டுமே தெளிவாக தெரியும் என்பதால் அரசிடாம் ரூ.1 கோடி நிதியளித்துவிட்டு தானும் நேரில் மக்களுக்கு உதவி செய்ய முதல்வரிடம் அனுமதி கேட்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை கேரள முதல்வரின் அப்பாயின்மெண்ட் கிடைத்துள்ளதாகவும் அந்த சமயம் தான் ரூ.1 கோடியை முதல்வரிடம் அளிக்கவுள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

More News

இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது பிக்பாஸ்: டேனியல் மட்டுமல்ல நாங்களும்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்குள் தினந்தோறும் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சண்டையால் போட்டியாளர்களுக்கு போரடிக்கின்றதோ இல்லையோ,

'ரெட்டத்தல' ராசி 'விஸ்வாசம்' படத்திலும் தொடருமா?

இன்று அதிகாலை வெளியாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து அஜித் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது

தல அஜித்தின் மரணமாஸ் 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட்லுக்

தல அஜித் நடித்த 'விசுவாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மரண மாஸ் ஆகவுள்ளது.

தனுஷின் 'வடசென்னை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது தெரிந்ததே. மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்த

மூன்றாவது முறையாக மோதும் சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

செப்டம்பர் 13ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என தெரிகிறது