ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பு: ரஜினிக்கு ஆதரவு என அறிவிப்பா?

  • IndiaGlitz, [Tuesday,January 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்ட நிலையில் ரஜினி ரசிகர்கள் முழு வீச்சில் அரசியல் களத்தில் இறங்கி ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு கோலிவுட் திரையுலகினர் பலர் ஆதரவும், ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வரும் 4ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சந்திப்பில் அவர் தனது தாயாருக்காக கட்டிய கோவில் திறப்பு விழா குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது. மேலும் இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் எண்ட்ரி, அவருடைய கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்த முக்கிய அறிவிப்பை ஒன்றை அவர் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே 'வா தலைவா போருக்கு வா தலைவா' என்ற பாடலை ரஜினியின் அரசியல் வருகைக்காக ராகவா லாரன்ஸ் சமீபத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மண்ணின் மனம் மாறாத 'மதுரவீரன்': டிரைலர் விமர்சனம்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள 'மதுரவீரன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது.

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' சென்சார் தகவல்கள்

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு UA'  சான்றிதழ் அளித்துள்ளனர்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஜினி-கமல் சந்திப்பு

வரும் 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர்.

ஆன்மீக அரசியல் இங்கு எடுபடாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

திராவிட பாரம்பரியம் மிக்க மண்தான் நமது தமிழகம். திராவிடத்திற்கு மாற்றாக எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது இங்கு சாத்தியமில்லை. அதனால் ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் எதுவும் இங்கு எடுபடாது,

கன்னடர்கள்தான் கர்நாடகாவை ஆளவேண்டும் என்று கூறினாரா பிரகாஷ்ராஜ்?

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆளவேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தது.