என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன்ஸ் டுவிட்!
- IndiaGlitz, [Monday,June 14 2021]
என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் என்றும் நானும் வருந்தி இருக்கிறேன் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட் ஒன்றை நடிகர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பதிவு செய்துள்ளார்.
நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள பெண் காவலர்கள் இனி சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்
இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைப் பெற்றது என்பதும் குறிப்பாக இதுகுறித்து ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் எடுத்த சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டரில் முதல்வருக்கும் டிஜேபிக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சாலையில் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதை அவசர தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆணையை கண்டு மன நிம்மதி அடைகிறேன், முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி’ என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.