தன்னலமின்றி 100% சரியான முடிவை எடுத்து உள்ளீர்கள்: ரஜினி குறித்து பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சியை ஆரம்பிக்க போவதில்லை என்றும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் எடுத்து இருக்கும் இந்த முடிவுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் நீண்ட அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கம் அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
ரஜினியின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பேதிர்ச்சியாக இருந்தாலும் அவரது உடல்நலம் முக்கியம் என்று கருதி அவரது முடிவை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தற்போது வந்துள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்ற்னர்.
இந்த நிலையில் இந்த ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் ஒருவராகிய நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
நீங்கள் எடுத்த முடிவு 100% சரியானது. எங்களுக்கு எதையும் விட உங்கள் ஆரோக்கியம் முக்கியமானது. உங்களை நம்பும் நபர்களைப் பற்றி அக்கறை கொண்டு நீங்கள் தன்னலமற்ற முடிவை எடுத்து உள்ளீர்கள். நீங்கள் எப்போதும் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ளீர்கள், அதுவே உங்களை மிகப் பெரியதாக ஆக்குகிறது. உங்களது உடல் ஆரோக்கியத்திற்காக எப்போதும் ராகவேந்திர சுவாமியை நான் பிரார்த்திக்கிறேன். குருவே சரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Guruve, The decision you’ve taken is 100% right ??@rajinikanth pic.twitter.com/2FwLvELrTF
— Raghava Lawrence (@offl_Lawrence) December 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com