ராகவா லாரன்ஸ் கோரிக்கையை உடனே செயல்படுத்திய கேரள முதல்வர்!

  • IndiaGlitz, [Saturday,May 09 2020]

திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடலை தமிழகத்திற்கு எடுத்து செல்ல உதவி செய்ய வேண்டும், அவருக்கான சிகிச்சை கட்டணத்தை தானே செலுத்தி விடுவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கடிதம் எழுதியிருந்தார் என்பதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் கடிதம் கிடைத்தவுடன், அசோக் தாயாரின் உடலை உடனடியாக தமிழகம் கொண்டு செல்ல கேரள முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அசோக் தாயாருக்கான சிகிச்சை கட்டணத்தையும் மருத்துவமனை நிர்வாகம் குறைத்துள்ளது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது:

முடக்குவாதம்‌ மற்றும்‌ இன்னும்‌ பிற நோய்‌ காரணிகளால்‌ கேரள NIMS தனியார்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக பத்திரிகையாளர்‌ அசோக்‌ என்பவரது தாயார்‌ மருத்துவமனையிலேயே இறந்துவிட்ட நிலையில்‌, வறுமையில்‌ வாடும்‌ அந்த பத்திரிகையாளர்‌ மருத்துவமனைக்கு செலுத்தவேண்டிய ஒரு லட்சத்து 40 ஆயிரம்‌ பணத்தை கட்ட முடியாமல்‌ அவதிப்படுவது குறித்து அவரது நண்பர்‌ மூத்த பத்திரிகையாளர்‌ கொ.அன்புகுமார்‌ அவர்கள்‌ மூலம்‌ அறிந்து, உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம்‌ மருத்துவக்கட்டணத்தை குறைத்து தர சொல்லி வேண்டுகோள்‌ விடுத்தோம்‌. அவர்களும்‌ 40 ஆயிரம்‌
தள்ளுபடி செய்து 1 லட்சம்‌ ரூபாய்‌ வாங்கிக்கொண்டு, அசோக்கின்‌ தாயாரது உடலை மருத்துவ பரிசோதனை செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்‌.

எனது கோரிக்கையை ஏற்று கட்டணத்தை குறைத்துக்கொடுத்த மருத்துவமனை எம்.டி. அவர்களுக்கு நன்றிகள்‌. தற்போது அசோக்கின்‌ தாயரது உடல்‌ தகனம்‌ செய்யப்பட்ட செய்தியையும்‌ அறிந்தேன்‌. இதற்கு உறுதுணையாக இருந்த இயக்குனர்‌ திரு. சாய்ரமணி, மலையாள திரைப்பட தயாரிப்பாளர்‌ திரு. லிஸ்டின்‌, பத்திரிகையாளர்‌ திரு.கொ.அன்புகுமார்‌, எனது உதவியாளர்‌ திரு.புவன்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌ நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்‌.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 

More News

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய இயக்குனர் பாரதிராஜா!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா குறித்து அதர்வா கூறிய கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நடிப்பு ஆகியவற்றை பாராட்டாதவர்களே தென்னிந்தியாவில் இருக்க முடியாது என்பது தெரிந்ததே.

இந்தியாவில் மே 17 க்குப் பிறகு என்ன நடக்கும்???

இந்தியாவில் நிலவும் சூழலைப் பொறுத்து இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு (மே 17) க்குப்பின் மீண்டும் தொடருவதற்கு வாய்ப்பு இல்லை என்று Economics Times செய்தி வெளியிட்டு இருக்கிறது

H-1B விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா அரசு முடிவு!!!

அமெரிக்காவில் கொரோனா பரவல் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

“கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியவில்லை”!!! வீட்டிற்குள் இருக்குமாறு மக்களை எச்சரித்த மகாராஷ்டிரா முதல்வர்!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.