விநாயகர் சதுர்த்தி தினத்தில் அஜித்துக்கு நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா?
- IndiaGlitz, [Sunday,August 23 2020]
நேற்று உலகம் முழுவதும் இந்து மக்களால் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் உள்ளூர் தலைவர்கள் முதல் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வரை இந்து மத மக்களுக்கு விநாயகர் சக்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடியது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை அடுத்து நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விநாயகர் சதுர்த்தி தினத்தில் அஜித்துக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.
அஜித் நடித்த ’அமர்க்களம்’ திரைப்படத்தில் தான் தன்னுடைய முதல் நடன இயக்குனர் பணி ஆரம்பம் ஆனதாகவும், இந்த படத்தில் இடம்பெற்ற ‘மஹா கணபதி’ என்ற பாடல் மூலம் தான் தனக்கு திரையுலக வாய்ப்பு கிடைத்தது என்றும், முதல் பாடலே வினாயகர் பாடல் வாய்ப்பை கொடுத்த தல அஜித் மற்றும் இயக்குனர் சரண் ஆகிய இருவருக்கும் தான் நன்றியைக் கூறிக் கொள்வதாகவும் அனைவரும் தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து என்றும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Happy Vinayagar Chathurthi everyone!
— Raghava Lawrence (@offl_Lawrence) August 22, 2020
My career started with this Maha Ganapathi song. At this moment, I would like to thank Charan sir and Ajith sir for this opportunity. May lord Ganapathi Make all your wishes come true like he blessed me. ???????? pic.twitter.com/qsAgJgRNbm