மே 1 முதல் மாற்றம்.. ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ.!

  • IndiaGlitz, [Tuesday,April 23 2024]

மே 1 முதல் மாற்றம் என்ற சேவை ஆரம்பமாக இருப்பதாக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர், இயக்குனர் , நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் பல சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக ஏழை எளிய குழந்தைகளின் படிப்பு செலவுக்கு அவர் உதவி செய்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் தற்போது அவர் படிக்க வைத்த குழந்தைகள் எல்லாம் சம்பாதிக்க தொடங்கியுள்ள நிலையில் அவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்கள் என்பதும் அது குறித்த வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மே1 முதல் மாற்றம் என்ற சேவை ஆரம்பமாக இருப்பதாகவும் அதில் தன்னுடைய உதவியால் படித்த மாணவர்கள் தற்போது பணி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை பிறருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்கள் என்றும் அந்த வகையில் ஆரம்பிக்கப்பட்டது தான் மாற்றம் என்ற சேவை என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் ராகவா லாரன்ஸ் அவர்களின் உதவியால் முன்னேற்றத்துக்கு வந்துள்ள சிலர் தாங்கள் இந்த சேவையில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று உள்ளதாக கூறிய நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.