ராகவா லாரன்ஸ் தொடங்குவது புதிய அரசியல் கட்சியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதில் இருந்தே ராகவா லாரன்ஸ் குறித்த செய்திகள் தினமும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இவற்றில் பெரும்பாலும் அவருக்கு எதிரான கருத்துக்களே பதிவாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது அவர் திடீரென ஒரு சேவை அமைப்பை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்!
இதுவரை என்னைத்தான் தவறாக பேசிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது தாய் தந்தையரைப் பற்றியும் மிக தவறாக பேசுகிறார்கள்! மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக்கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்!
நான் ஒரு தனி மனிதன்!
எனக்கென்று தனிக் கூட்டமில்லை!
நான் படிக்காதவன்!
ஒரு தனி மனிதனாய் நின்று.....
*" அன்புதான் தமிழ்"*
என்கிற,
அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன்! இந்த அமைப்பின் மூலம்,
தமிழரின் மாண்பையும்,
தமிழரின் பண்பையும்,
தமிழரின் அன்பையும்,
உலகறிய செய்வதே அதன் நோக்கம்!
"இன்னார் செய்தாரை ஒருத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்!" என்பது திருக்குறள் அதை பின்பற்றியே...
"எதிரிக்கும் உதவி செய்!
பிறர் துன்பங்களை உன் துன்பமாக நினை!
நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு!
உள்ளத்தால் ஒன்றே!
கடவுளை வெளியே தேடாதே!
உனக்குள் இருக்கிறார்!
எனக்கு இது போதும் என்று நினை!
ஆசையை விடு!
அள்ளிக்கொடி!
ஆண்டவன் உன் பக்கம்!"
அந்த ஆண்டவன் இருப்பது உண்மையானால்....
தர்மம் இருப்பது உண்மையானால்...
என்வழி உண்மையானால்...
நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு
இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கட்டும்!
இறுதியாக ஒன்று....
"என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும்,
அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும்,
நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்...!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com