எனக்கும் மோசமாக பேசத்தெரியும்: சீமானுக்கு மீண்டும் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், யாரையும் வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சீமானை மீண்டும் ராகவா லாரன்ஸ் விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ரஜினி பிறந்த நாளை அடுத்து நடந்த விழாவில் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியபோது ’ஓபிஎஸ் அவர்கள் அரசியலில் எங்கேயோ இருந்தார், ஆனால் அவருடைய கர்மம் நன்றாக இருந்ததால் முதலமைச்சரானார். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் இன்று முதல்வராக இருக்கின்றார். முதல்வராக இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப் படக்கூடாது. அவர்களை வாழ்த்த வேண்டும்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அரசியல் ரீதியாக யாரும் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அது தவறில்லை. ஆனால் அரசியலுக்கு யாரையும் வரக்கூடாது என்று சொல்வதும் அரசியலுக்கு வருபவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதும் மிகவும் தவறாகும்.
எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், நான் ஒருவன் மட்டுமே புத்திசாலி, மற்றவர்கள் எல்லாம் முட்டாள் என்ற ரீதியில் யாரும் பேசக்கூடாது. நீங்கள் ஒருவர்தான் தமிழன் என்றால் நாங்கள் எல்லாம் அமெரிக்காவுக்கு பிறந்தவர்களா? என்று கேள்வி எழுப்பிய ராகவா லாரன்ஸ் நான் ராயபுரத்தில் இருந்து வந்தவன் எனக்கு உங்களை விட மிக மோசமாக பேச தெரியும். ஆனால் என் தலைவன் அப்படி வளர்க்கவில்லை. என் பின்னால் ரஜினி என்ற மூன்றெழுத்து இருக்கிறது. அதனால் நாங்கள் பொறுமை காத்து நிற்கின்றோம்.
ஆனால் அதே நேரத்தில் தர்மம் ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்கும். எல்லையை மீறினால் நாங்களும் பதிலடி கொடுக்க தயாராவோம்’ என்று ராகவா லாரன்ஸ் அந்த மேடையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தர்பார் இசை வெளியீட்டு விழாவின்போது சீமானை மறைமுகமாக தாக்கிப் பேசிய ராகவா லாரன்ஸ் இன்று மீண்டும் அவரை தாக்கி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments