எல்லாமே வதந்தி.. யாரும் நம்பாதீங்க... 'காஞ்சனா 4' குறித்து ராகவா லாரன்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’காஞ்சனா 4’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக சீதாராமன் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாக தகவல் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
முதல் மூன்று பாகத்திலும் பிரபல நடிகைகள் ஹீரோயின்களாக நடித்த நிலையில் நான்காம் பாகத்தில் மிருணாள் தாக்கூர் என்பது சரியான தேர்வு என ரசிகர்களும் இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சற்று முன் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் ’காஞ்சனா 4’குறித்து வெளியாகி கொண்டிருக்கும் தகவல்களும் அந்த படத்தில் நடிப்பவர்களின் தகவல்களும் சமூக வலைதளத்தில் கசிந்து வருவது முழுக்க முழுக்க வதந்தி. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ராகவேந்திரா புரடொக்சன்ஸ் சார்பில் கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ’காஞ்சனா 4’படத்தில் மிருணால் தாக்கூர் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை ராகவா லாரன்ஸ் மறுத்திருக்கிறார் என்று தான் கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிப்பார்கள் என்பதை ராகவேந்திரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தெரிவிக்கும் வரை பொறுமை காப்போம்.
Hi friends and fans,
— Raghava Lawrence (@offl_Lawrence) June 9, 2024
All the information regarding Kanchana 4 and casting that are circulating around social media are just rumors. Official announcement will be made through Ragavendra Production. Coming soon! pic.twitter.com/T46gcYyjAN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com