இனிமேல் என்னை தேடி நீங்க வரவேண்டாம்.. உங்களை தேடி நான் வர்றேன்: ராகவா லாரன்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இனிமேல் ரசிகர்கள் என்னை தேடி வர வேண்டாம் என்றும் ரசிகர்களை தேடி நானே வருகிறேன் என்றும் கூறியுள்ள நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ், முதல் கட்ட சந்திப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திரை உலக பிரபலங்களின் ரசிகர்கள் அவ்வப்போது சென்னை வந்து தங்கள் விருப்பத்துக்குரிய நடிகருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்களை ரசிகர்கள் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ரசிகர்கள் சென்னை வந்து ராகவா லாரன்ஸ் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் திரும்பிச் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு ரசிகர் காலமானார். இதனையடுத்து ராகவா லாரன்ஸ் தற்போது புதிய முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி இனிமேல் ரசிகர்கள் தானே தேடி வர வேண்டாம் என்றும் நானே ரசிகர்களை தேடி வந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘கடந்த முறை சென்னையில் ரசிகர் சந்திப்பு போட்டோஷூட் நடத்திய போது ரசிகர் ஒருவர் விபத்தில் உயிர் இழந்துவிட்டது தனக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது என்றும், இனிமேல் எனக்காக ரசிகர்கள் பயணம் செய்யக் கூடாது என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் ரசிகர்களை சந்திக்கும் பயணம் தொடங்க இருப்பதாகவும் முதல் கட்டமாக விழுப்புரம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள நாளை விழுப்புரம் வரவிருப்பதாகவும் நாளை சந்திப்போம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Hi friends and fans, Last time during a fans meet photoshoot in Chennai, One of my fan met with an accident and lost his life. It was so heartbreaking. On that day, I decided that my fans shouldn’t travel for me but I will travel for them and organize a photoshoot in their town.… pic.twitter.com/lIdnJuKbhX
— Raghava Lawrence (@offl_Lawrence) February 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments