குடிகாரர்கள் எதிரொலி: சேவையை நிறுத்த போகிறாரா ராகவா லாரன்ஸ்?

  • IndiaGlitz, [Wednesday,May 20 2020]

ஒருபக்கம் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் தமிழக அரசு, பொதுமக்களுக்கு தனிமனித இடைவெளி குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் டாஸ்மாக் கடையை திறந்து கொரோனா வைரஸ் பரவுவதற்கு அரசே காரணமாக இருப்பதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமா? என்று தனது நண்பர்கள் அறிவுறுத்தி வருவதாகவும், இவ்வாறு அறிவுறுத்தியவர்களில் தனது தாயாரும் ஒருவர் என்றும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது:

வணக்கம் நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, டாஸ்மாக் ஒரு சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. டாஸ்மாக்கை நோக்கி கூட்டம் அதிகம் செல்வதைக் கண்டதும் எனது அம்மா மற்றும் என்னுடன் பணியாற்றும் சில நண்பர்கள்
என்னிடம் சில கேள்விகளை கேள்வி எழுப்பினார்கள்

‘நாங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்ய மிகவும் கடினமாக உழைக்கிறோம். ஆனால் பொறுப்பற்ற முறையில் பலர் டாஸ்மாக் சென்று குடித்து தங்களுக்கும் பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றார்கள். இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா? என்று கேட்கின்றார்கள்

என் அம்மா மற்றும் நண்பர்கள் மட்டுமல்ல. எனக்கு உதவி செய்பவர்கள் கூட நாம் சரியான நபர்களுக்குத்தான் உதவி செய்கிறோமா? நமது சேவையால் உண்மையில் பலன் இருக்கின்றதா? என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் குடிகாரர்களால் நமது சேவை நிறுத்தப்பட்டால் அந்த குடிகாரர் குடும்பத்தில் அவரது தாய், மனைவி மற்றும் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள். மேலும் குடிக்காத பல ஆண்களின் குடும்பத்தினர்களும் நாம் சேவையை நிறுத்திவிட்டால் பாதிக்கப்படுவார்கள். எனவே தயவுசெய்து சேவையை நிறுத்த வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அதே நேரத்தில் அனைத்து குடிகாரர்களுக்கும் எனது சிறிய கோரிக்கை என்னவெனில் குடிப்பதற்கு முன், உங்கள் குழந்தையின் கண்ணீரைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்’ என்று கூறியுள்ளார்.
 

More News

இந்தியாவில் சூப்பர் புயல்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா???

கடந்த சில ஆண்டுகளாகவே வங்ககடலை ஒட்டி புயல்கள் தோன்றி, கரையை கடப்பது வாடிக்கையாகி விட்டது.

கொரோனா பரவல்:   நேற்று ஒரேநாளில் 4 ஆவது இடத்தைப் பிடித்து அதிச்சியை ஏற்படுத்திய இந்தியா!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து கொண்டே வருகிறது.

1500ஐ நெருங்கும் ராயபுரம்: இன்றைய சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 668 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 552 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள்

குழந்தைகளுக்கான ஜான்சன்& ஜான்சன் பவுடர் புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு!!! விற்பனை நிறுத்தம்!!!

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஜான்சன்& ஜான்சன் உற்பத்திப் பொருட்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் டரம்ப் கொரோனாவில் இருந்து தன்னை எப்படி காத்துக் கொள்கிறார் தெரியுமா???

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போதும், பொது வெளியில் தோன்றும் போதும் மாஸ்க் போன்ற எந்த பாதுகாப்பு கருவிகளையும் பயன்படுத்துவது இல்லை