பத்திரிகையாளருக்காக கேரள முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்

கொரோனா மீட்புப்பணிக்காக சுமார் ரூ.5 கோடி வரை நிதியுதவி செய்துள்ள நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், இன்னும் அரிசி, பருப்பு போன்ற பொருட்களையும் தனது ‘தாய்’ என்ற அமைப்பின் மூலம் உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழக பத்திரிகையாளர் ஒருவரின் தாயார் கேரளாவில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்ததை அடுத்து அவருடைய உடலை தமிழகம் கொண்டு வர தகுந்த ஏற்பாடு செய்யும்படி கேரள முதல்வருக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கேரள முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு கேரள முதல்வருக்கு வணக்கங்கள்... கொரோனா தொற்று மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து தாங்கள் செய்துவரும் அரும்பணியை கண்டு வியக்கிறேன். ஒருமுறை எனது தாயாருடன் தங்களை சந்தித்து நிவாரணத்தொகை வழங்கியதையும் பெருமையாக கருதுகிறேன். ஒரு சிறிய வேண்டுகோளை தங்களிடம் முன்வைக்கிறேன்.

திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, நேற்று மாலை மருத்துவமனையிலேயே உயிரிழந்த நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, தமிழகத்தில் கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதிக்கு எடுத்துச்செல்ல வேண்டும்...

கொரோனாவால் அவரால் மருத்துவமனைக்கு செலுத்தவேண்டிய ஒன்றரை லட்சம் பணத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறார். அசோக் என்பவர் தாயை இழந்து கதறுவது குறித்து, மூத்த பத்திரிகையாளர் கொ.அன்புகுமார் அவர்களின் மூலம் எனது உதவியாளர் புவனிடம் இருந்து சம்பந்தபட்ட நபரின் ஆடியோவை கேட்டு மிகுந்த துயருற்றேன்...

ஒரு சிறிய வேண்டுகோளாக அவரது தாயாரின் உடலை மருத்துவமனையிலிருந்து தமிழகம் எடுத்துச்செல்ல உடனடியாக தாங்கள் அனுமதிக்க வேண்டும்... அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். மருத்துவமனைக்கு செலுத்தவேண்டிய பணத்தை ஓரிரு நாளில் நானே செலுத்திவிடுகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்... நன்றி!!


இவ்வாறு ராகவா லாரன்ஸ், கேரள முதல்வருக்கு விடுத்த வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.

More News

தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை 2' குறித்த முக்கிய தகவல்

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைப்பில் உருவாகிய 'பொல்லாதவன்' மற்றும் 'ஆடுகளம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் மூன்றாம் முறையாக இருவரும் இணைந்த

கொரோனாவால் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 19 லட்சம் மக்கள் இறக்க நேரிடும்!!! WHO கணிப்பு!!!

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் கடும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகள்

ஊரே போராட்டம் செய்தும் மூட முடியாத மதுக்கடையை ஒரே ஒரு கொரோனா நோயாளி மூடிய அதிசயம்

http://www.puthiyathalaimurai.com/newsview/69960/corona-affect-person-buy-liquor-in-ariyalur-and-closed-tasmac

ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

கொரோனா நோயின் புதுப்புது அறிகுறிகள் என்ன??? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

கொரோனா பாதித்தவர்களுக்கு உடல் வெப்பநிலை அதிகரிப்பு,  சளி, காய்ச்சல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் என உலகச் சுகாதார நிறுவனம் தெளிவு படுத்தியிருந்தது.