போருக்கு வா தலைவா! ரஜினியை பாடல் மூலம் அழைக்கும் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Saturday,December 30 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்திக்கவுள்ள நிலையில் நாளை அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார். ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று தமிழக மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ரஜினியின் தீவிர ரசிகரும், இயக்குனர் மற்றும் நடிகருமான ராகவா லாரன்ஸ் 'வா தலைவா போருக்கு வா' என்ற பாடல் ஒன்றை வெளியிட உள்ளார். இந்த பாடல் ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  ரஜினியின் பிறந்தநாளுக்காக பாடலை ஒன்றை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார் என்பது தெரிந்ததே

இந்த பாடலின் மூலம் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் ராகவா லாரன்ஸ், அவருடைய கட்சியிலும் இணைந்து பணியாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்