ரூ. 3 கோடியை அடுத்து ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பு நிதியாக நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி சமீபத்தில் நிதியுதவி செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தற்போது மீண்டும் ஒரு பதிவை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் தான் கொடுத்த நிதிக்காக அனைவரும் தன்னை பாராட்டியதாகவும் அவர்கள் அனைவருக்கும் நன்றி என கூறிய ராகவா, மேலும் சிலரிடம் இருந்து உதவி கேட்டு தனக்கு கோரிக்கை வந்ததாகவும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னால் அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதால் தன் உதவியாளர்களிடம் தான் பிசியாக இருப்பதாக சொல்ல சொல்லியதாகவும் கூறிய ராகவா, அதன்பின் தனது அறைக்கு சென்று யோசித்தபோது பொதுமக்கள் பசியால் அழுது கொண்டிருப்பதை கேள்விப்பட்டு தனக்கு நேற்றிரவு முழுவதும் தூக்கமே வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

அனைத்து கோவில்களும் தற்போது மூடியிருப்பதால் தற்போது பசியுடன் இருப்பவர்களுக்கு உதவி செய்தாலே கடவுளுக்கு சேவை செய்ததற்கு சமம் என்ற நிலையில் தற்போது எனது ஆடிட்டருடன் ஆலோசனை செய்து வருகின்றேன என்றும், இந்த பூமியில் நாம் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை, போகும்போது எதையும் கொண்டு செல்ல போவதில்லை என முடிவு செய்து தற்போது இன்று மாலை 5 மணிக்கு மேலும் சில அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். எனவே இன்று மாலை மேலும் சில கோடிகள் நிதியுதவி குறித்த அறிவிப்பை ராகவா லாரன்ஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கொரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை ஹிலாரி ஹீத் என்பவர் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது

கொரோனா நிவாரண நிதியாக மிகப்பெரிய தொகை கொடுத்த டிக்டாக்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்கி வருகின்றன

அமெரிக்காவை நெருங்கும் புயல்: கொரோனாவைவிட பன்மடங்கு சேதமாக வாய்ப்பா?

உலகிலேயே கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருப்பது அமெரிக்கா தான். இந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்

பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வந்த போதிலும் தமிழக அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து முடிந்தவரை கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறது.

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா; மருத்துவமனையை சீல் வைக்க முடிவா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வரும் நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 77 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது